அற்புத சக்திகளை கொண்ட உள்ளங்கை பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

நம் கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யும் இடமாகும், மனதால் விடமுடியாத பாவங்களை தன் உள்ளங்கையால் விடமுடியும், மனதால் தாங்க முடியாத  துன்பத்தை தன் உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும்.


எனவே ஆலயங்களில் இந்த பலிபீடம் முக்கியம் வாய்ந்ததாகும், அதே போல் சாப்பிடும்போது நம் கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நம் சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் சாமி கும்பிட்டபின் விழுந்து கும்பிட்டபின் இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி  எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம்.
 
பலரும் பல புண்ணிய ஆலயம் சென்று வந்தாலும் பலனில்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விழுந்து வணங்கி எழும்போது உள்ளங்கை ஊனி சக்தியை பூமிக்கு தாரை வார்த்து கொடுப்பதே அதற்கு காரணமாகும். 
 
ஆலயம் சென்றவுடன் பலிபீடத்தில் உள்ளங்கை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு திரும்பும்போது எங்கும் கை வைக்கக்கூடாது, உள்ளங்கையில் அவ்வளவு சக்தி நிறைந்துள்ளது.
 
மங்களவன் என்னும் செவ்வாயின் இடம் இந்த உள்ளங்கை தான். அதில் எதை செய்தாலும் பெருகும், ஆலயத்தில் பிரசாதம். தீர்த்தம். விபூதி குங்குமம் அனைத்தும்  உள்ளங்கையால் வாங்கியே சாப்பிடுகிறோம், விபூதியாய் இருந்தாலும் விரலால் எடுத்து இட்டுக் கொள்ளாமல் அப்படியே எடுத்து பூசிக் கொள்ளும் பழக்கம்  அப்போதைக்கு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்