சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம்: தேவஸ்ம்போர்டு வலியுறுத்தல்

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (20:40 IST)
மகரவிளக்கு பூஜையின் போதும் மண்டல பூஜையின்போதும் சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தும் இன்னும் பெண்கள் அக்கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இளம் பெண்கள், பெண்ணிய அமைப்பினர் சபரிமலைக்கு சென்றாலும் அவர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது, சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். சபரிமலைக்கு பெண்களின் வருகையால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இது பக்தர்களுக்கு இடையூறு உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆனால் தேவசம்போர்டு வலியுறுத்தலை மீறி பெண்கள் சிலர் சபரிமலை கோவிலுக்கு மகரபூஜையின்போது செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்