அல்லு அர்ஜுனின் தமிழ் படம் விரைவில் தொடக்கம்?

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:49 IST)
சமீப காலமாக தெலுங்கு நடிகர்கள் நேரடியாக தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

தெலுங்கு சுப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தார்.  அதைத்தொடர்ந்து நாகசௌரியா  தியா என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியது. 
 
இந்நிலையில் தெலுங்கில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நேரடியாக தமிழ் பேசி நடித்துள்ள நோட்டா வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார். ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் யார் என்பது தெரியவில்லை. லிங்குசாமி இயக்குவரா அல்லது வேறு யாராவது இயக்க உள்ளார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும். அல்லு அர்ஜுனுக்கு தமிழ் நன்றாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்