வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

Siva

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (07:40 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை என்று அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், அயல்நாட்டு நிறுவனங்கள், அரசு சார்பில் வீடு கட்டித் தரும் திட்டத்தின் மூலம் வீடுகளை வாங்க அல்லது கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்றும் ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் இதுவரை வீடு வாங்கியவர்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் இனிமேல் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்