ரஜினி அதிமுக தலைவரா? அதற்கு வாய்ப்பே இல்லை: செல்லூர் ராஜூ

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (21:07 IST)
ரஜினிகாந்த அதிமுகவுக்கு தலைமை ஏற்க வந்தால் அதற்கு ஒருபோது இடம் தர மாட்டோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இன்று கட்சி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த பாஜகவின் கைக்கூலி என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ரஜினி அதிமுக கட்சிக்கு தலைமை ஏற்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
 
இதற்கு அதிமுக அமைச்ச்ர் செல்லூர் ராஜூ அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம். அதே சமயம் தொண்டனாக இணைந்து பின்னர் படிப்படியாக முன்னேறி வந்துதான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும்.
 
நேரடியாக கட்சியின் தலைமை பொறுப்புதான் வேண்டுமென்று ரஜினி வேண்டுகோள் வைத்தால் கட்சி தலைமை அதை ஒருபோதும் ஏற்காது. ரஜினி மட்டுமல்ல அது கமலாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி.
 
இதுதான் கட்சியின் நிலைப்பாடும். எனவே கட்சியில் சேர்ந்தவுடனே தலைமை பொறுப்பு என்பது கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்