ஒரே நாடு ஒரே தேர்தல்; ஒத்துக்கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை
சனி, 4 ஆகஸ்ட் 2018 (20:01 IST)
2024ஆம் ஆண்டு ஒரே தேர்தல் ஒரே நாடு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், 2024 வரை இந்த தமிழக அரசு இருக்க வேண்டுமென்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கரூரில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அளவில் ஆங்காங்கே, முதல்வர் உள்பட அமைச்சர்களும் வெவ்வேறு விதமாக கருத்துக்கள் கூறி வரும் நிலையில், உதாரணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தினை மாவட்டம் என்றும், முன்னாள் முதல்வர் இந்திராகாந்தி என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்றெல்லாம் கூறி வரும் நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரச்சினை வந்து கொண்டிருக்கும் போது, அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்த மக்களவை துணை சபாநாயகரும்,. அ.தி.மு.க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை, அவரே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதனை தான் தான் கொண்டு வர விரும்பியதாகவும், அவரே, அதற்காக பிரதமரிடம் மனு கொடுத்ததாகவும் கூறிய சம்பவம் அ.தி.மு.க கட்சியினரிடையே மட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மேலும், தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு 2024 வரை ஆள வேண்டுமென்று சூசகமாக கூறியுள்ளார்.
கரூர் அருகே காந்திகிராமம் பகுதியில் நடைபெற்று வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி பணிகள் குறித்து, மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பியுமான தம்பித்துரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில், ஆய்வு மேற்கொண்டனர். இன்று மாலை நடைபெற்ற ஆய்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது., சென்ற வருடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் வர வேண்டுமென்று சென்ற வருடம் நீங்களே,(தம்பித்துரை) சொன்னீர்களே, தற்போது, நீங்களே (தம்பித்துரை) எதிர்ப்பது ஏன் ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டுமென்று பல்வேறு கட்சியினரின் கருத்து, இதில் தனிப்பட்ட என் கருத்து, நானே (தம்பித்துரை) பாரத பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டுமென்பது எனது கருத்து, அதை நான் தான் வலியுறுத்தினேன், ஆனால், தமிழகத்தினை பொறுத்தவரை இப்போது வரும் 2019 ம் வருடம், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த முடியாது., ஏனென்றால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு தான் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியும்.
ஆதலால், அடுத்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு, எங்கு ஆட்சி முடிகின்றதோ, அதாவது எங்கு 6 மாதத்திற்குள் ஆட்சி முடிகின்றதோ, அங்கு பார்த்து, அங்கு சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமென்று தான், நான் வலியுறுத்தியுள்ளேன், அதாவது 2024 ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் வரும் போது தான், சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்றத்தேர்தலும் நடத்த வேண்டும், ஆகவே, 2024 ல் நடைபெறும் தேர்தலில் இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று நானே (தம்பித்துரை) பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறிய தம்பித்துரை மீண்டும், மீண்டும் 2024 ம் ஆண்டில் தான் சட்டமன்றத்திற்கும்,. நாடாளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டுமென்றும் மீண்டும், மீண்டும் கூறினார். ஆனால் தான் தான் முதலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த வேண்டுமென்றும் கூறினார்.