ரஜினியின் '2.0' அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (06:39 IST)
இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்ற நிலையில் '2.0 திரைப்படம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த படத்திற்கு பின்னர் ரஜினி நடிக்க ஆரம்பித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்கள் ரிலீஸ் ஆகி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் பாதியை முடித்துவிட்டார்.
 
இந்த நிலையில் கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள் ஏற்படுத்திய தாமதம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. ஆம், இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி நவம்பர் 29 என்று அறிவித்துள்ளார். 
 
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே. ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின் '2.0' திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாவதால் இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு டபுள் தீபாவளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய்குமார் உள்பட பலர் நடித்துள்ள '2.0' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்