பெண் காங்கிரஸ் பிரமுகரின் 10 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (07:47 IST)
பிரபல பெண் காங்கிரஸ் பிரமுகரின் பத்து வயது மகளுக்கு டுவிட்டர் மூலம் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி., இவர் ஒரு முன்னணி பத்திரிகையில் பணிபுரிவரும் கூட. இவருடைய பத்து மகள் மகளுக்கு போலி டுவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா, உடனே உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவின்படி உடனடியாக செயல்பட்ட மும்பை மற்றும் டெல்லி சைபர் க்ரைம் போலீசார், பிரியங்கா சதுர்வேதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். பிரியங்காவின் மகளுக்கு அவர் ஆபாச மற்றும் பாலியல் மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கண்டுபிடித்த மும்பை மற்றும் டெல்லி போலீசார்களுக்கு பிரியங்கா சதுர்வேதி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்