எனவே, அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த மாணவி கூறி வந்துள்ளார். ஆனால், இது நமது குடும்பத்திற்கு ஒத்து வராது எனவே காதலை கைவிடு என சந்திரிக்காவின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஆனாலும், அவர் தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிக்கா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது, சந்திரிக்காவிற்கு அவரது தந்தை புதிய செல்போனை பரிசளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை சந்திரிக்கா தனது செல்போனில் தனது காதலனுடம் பேசிக்கொண்டிருந்தார். இதுபற்றி அவரின் தந்தை கேட்ட போது, நான் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என வீம்பாக பேச, கோபமடைந்த அவரின் தந்தை கோடாரி கைப்பிடியால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சந்திரிக்கா அங்கேயே மரணமடைந்தார்.