விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (23:55 IST)
நானும் ரவுடிதான், 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த வெற்றி ஜோடி விஜய்சேதுபதி-நயன்தாரா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சாயிரா நரசிம்மரெட்டி' என்ற படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
 
சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஒப்பாயா' என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் அதுமட்டுமின்றி இந்த படத்தில் அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, தமன்னா, உள்பட பலர் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது தனக்கு இருக்கும் அதிகப்படியான பணியின் காரணமாக இந்த படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி என்பவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்