சமத்துவமக்கள் கட்சி தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமாரின் தேர்தல் வாகனத்திலிருந்து, தேர்தல் ஆணையம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்த விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் நல்லூர் விலக்கு பகுதியில், இன்று அதிகாலை, பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, சரத்குமாரின் வாகனத்தில் இருந்து ரூ.9 லட்சம் சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டப்படவில்லை. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தார்கள்.