அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Webdunia
புதன், 18 மே 2016 (07:15 IST)
பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
 

 
அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதியில் திமுக சார்பில், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ-வான கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பலாஜியும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வேட்பாளர்கள் வழங்கியதாக கூறி, தேர்தலை மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது.
 
இந்த நிலையில், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து மே 18 ஆம் தேதி (புதன்கிழமை), வேலாயுதம் பாளையம், க.பரமத்தி, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
 
மு.க.ஸ்டாலின், வேலாயுதபாளையத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்