ரூ.350 மதிப்புடைய சீன செல்போனை கொடுத்து ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா : நடிகை குஷ்பு

Webdunia
திங்கள், 9 மே 2016 (14:18 IST)
அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், எல்லோருக்கும் இலவச செல்போன் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.


 

 
இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு “தமிழக மக்களுக்கு ரூ.350 மதிப்புள்ள சீன செல்போன்களை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார் ஜெயலலிதா. 
 
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய காமெடி. கடந்த ஐந்து வருடங்களாக எதுவும் செய்யாமல், தூக்கத்திலிருந்து முழித்தது மாதிரி, தற்போது திடீரெனெ மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறார். தேர்தல் அறிக்கையில் கூறியதையெல்லாம், அவர் நினைத்திருந்தால் முன்பு செய்திருக்க முடியும்.
 
ஆனால், அப்படி செய்யாமல் தேர்தல் நெருங்கி வருதால், இலவசங்களை அளித்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கிறார். திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களின் நலனுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
கருத்து கணிப்புகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று செய்தி வெளியானதால், ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் இப்படி இலவசங்களை அறிவித்துள்ளார்” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்