ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி.? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி..!!

Senthil Velan

சனி, 1 ஜூன் 2024 (21:25 IST)
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,  திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனியிடம் தோல்வியடைவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற முடிவடைந்தது.  இதில் பதிவாகி உள்ள வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா, அதிமுக சார்பில் ஜெய்பெருமாள் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
 
இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நூலிழையில் திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனியிடம் தோல்வியடைவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு வெற்றி வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாஸ் கனிக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு 33 சதவீத ஓட்டுகள் பெறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: 3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!
 
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு 22 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும், அவர் 3ம் இடத்துக்கு தள்ளப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்