Exit Poll 2024 Live: இந்தியாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? மீண்டும் பாஜகவா? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Prasanth Karthick

சனி, 1 ஜூன் 2024 (18:36 IST)
Lok Sabha Election 2024 Exit Poll Results இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது காங்கிரஸின் மாநில கட்சிகளின் உடனான இந்தியா கூட்டணி வெல்லுமா?


 
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்களாட்சி தேர்தலின் இந்த ஆண்டு தேர்தல் இன்று நிறைவடைந்தது. இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 சுற்றுகளில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் சுற்று தேர்தல் தொடங்கி ஜூன் 1ல் 7வது சுற்று தேர்தலுடன் அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன.

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி அமைந்த நிலையில், 2019ம் ஆண்டிலும் பாஜகவின் ஆட்சியே தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் கடந்த 2 மக்களவை தேர்தல்களிலும் வலுவிழந்து இருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் I.N.D.I.A கூட்டணி மூலமாக பல மாநில கட்சிகளோடு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது

இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் பாஜக மட்டும் தனியாக 441 இடங்களில் போட்டியிட்டுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் – 17, ஜனதா தளம் – 16, சிவசேனா – 15, பாமக – 10, லோக் ஜனசக்தி கட்சி – 5, நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி – 5, பாரத் தர்ம ஜனசேனா – 4, ஜனதா தளம் – 3, தமிழ் மாநில காங்கிரஸ், 3, அமமுக – 2, அப்னா தல் – 2, அசோம் கனா பரிஷத் – 2 மற்றும் சில சிறிய கட்சிகள் தலா 1 இடங்கள் என போட்டியிட்டுள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தனியாக 285 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமாஜ்வாதி – 62, ராஷ்ட்ரிய ஜனதா தல் – 24, திமுக – 21, சிவசேனா (உத்தவ் தாக்கரே) – 21, நேஷனலிஸ்ட் காங்கிரஸ் – 10, ஆம் ஆத்மி – 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி – 6, ஜார்கண்ட் முக்தி மோர்சா – 6, கம்யூனிஸ்ட் கட்சி – 4, மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் – 4, ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் – 3 மற்றும் சில கட்சிகள் என மொத்தம் 466 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியின் போட்டி உள்ளது.

இது தவிர மேற்கு வங்கம், அசாம், மேகாலயா சேர்த்து திரிணாமூல் காங்கிரஸ் தனியாக 47 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி – 46 இடங்கள், காங்கிரஸ் – 43 இடங்கள் உள் கூட்டணியில் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளின் படி வாக்கு சதவீதத்தில் பாஜக கூட்டணி 45% முதல் 48% வரை பெறும் என கணிக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி 16% முதல் 28 % வரையிலான வாக்குகளை பெறலாம் என கணிக்கப்படுகிறது. பிற கட்சிகள் 13% முதல் 27% வரை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பெரும்பான்மையான இடங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கலாம் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

மொத்தமாக பாஜக கூட்டணி 359 தொகுதிகள் வரையிலும், இந்தியா கூட்டணி 154 இடங்கள் வரையிலும் வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மாநில வாரி வெற்றி வாய்ப்பு விபரங்கள்:

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி 26-30 இடங்களிலும், பாஜக கூட்டணி 1-3 இடங்களிலும், மற்றவை 6-8 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது

கர்நாடகாவில் பாஜக கூட்டணி 20-22 இடங்களிலும், காங்கிரஸ் 3-5 இடங்களிலும் ஜேடிஎஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

 
கேரளாவில் பாஜக 2-3 இடங்களிலும், காங்கிரஸ் 13-14 இடங்களிலும், LDF 1 இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது.

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணி 69-74 இடங்களிலும், இந்தியா கூட்டணி 6-11 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
 
தெலுங்கானாவில் பாஜக 8-9 இடங்களிலும், காங்கிரஸ் 7-9 இடங்களிலும், AIMIM 1 இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

பீகாரில் ஆர்டிஜே கட்சி 6-7 இடங்களில் வெற்றியும், காங்கிரஸ் 0-2 இடங்களில் வெற்றியும், ஜேடி(யு) கட்சி 9-10 இடங்களில் வெற்றியும், பாஜக 14-16 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக 7-10 இடங்களில் வெற்றியும், இந்தியா கூட்டணி 5-7 இடங்களில் வெற்றியும் பெறலாம் என கணிக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 13-17 இடங்களிலும், பாஜக 23-27 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் – காங்கிரஸ் – 1-3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

ஆந்திராவில் பாஜக 20-25 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங். 0-4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக கூட்டணி 10-11 இடங்களிலும், இந்தியா கூட்டணி 4-6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக 26-28 இடங்களிலும், இந்தியா கூட்டணி 1-3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

டெல்லியில் பாஜக 6-7 இடங்களிலும், ஆம் ஆத்மி 0-2 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு. காங்கிரஸ் வெல்ல வாய்ப்புகள் இல்லை என கணிப்பு

ஒடிசாவில் பாஜக 15-18 இடங்களில் பிஜேடி கட்சி 7-3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு

பஞ்சாப்பில் பாஜக 0-2 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3-6 இடங்களிலும், காங்கிரஸ் 0-3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு என கணிப்பு

அசாமில் பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக TOI கணிப்பு

ராஜஸ்தானில் 16-19 இடங்களில் பாஜக கூட்டணியும், 5-7 இடங்களில் காங்கிரஸும், மற்றவை 1-2 இடங்களிலும் வெற்றிபெறலாம என Axis my India கணிப்பு
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்