அந்த வைகோ என்ன செய்தார் தெரியுமா? வெளுத்து வாங்கும் கி.வீரமணி

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (16:19 IST)
மக்கள் நலக் கூட்டணியை தவறான திசையில் இழுத்துச் சென்று தோல்விக்கு வைகோ காரணமாக இருந்தார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றுள்ள அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் திக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
குறிப்பாக, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுகவுக்கு அதன் பொதுச் செயலாளருக்கு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
மக்கள் நலக் கூட்டணி என்ற 4 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க இருந்தது. பின்பு, தேமுதிக, தமாகா இணைந்து ஓரணியாக தேர்தல் களத்தில் நின்றன. இந்தத் தேர்தல் திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மாற்று அணி என்ற ஒரு முழக்கம் வெற்று ஒலி என்று தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிட்டன.
 
இந்த கூட்டணி ஓர் இடத்தைக் கூட பிடிக்கவில்லை; குறிப்பாக, கூட்டணி தலைவர் விஜயகாந்த்கூட படுதோல்வி அடையும் அளவுக்கு மக்கள் பெரும் தோல்வியைத் தந்துவிட்டனர். பலர் டெபாசிட்டையும் இழந்துவிட்டனர்.
 
இந்த அணியைத் தவறான திசைக்கு அழைத்துச் சென்றவர் ஒருவர் உண்டென்றால், அவர் வைகோ தான். யார் மீதோ உள்ள கோபத்திலோ,  அவசர ஆத்திரக்கோலத்தை அள்ளித் தெளித்து விட்டார். அதன் விளைவினையும் அனுபவிக்க அவர் நேர்ந்துவிட்டது.
 
இந்தக் கடும் தோல்விக்கு பிறகு கட்சியை நிமிர்த்தி செயல்பட  வைப்பது என்ன சாதாரண காரியமா? என தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்