இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

Siva

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (18:16 IST)
இந்த ஆண்டு நாடாளுமன்றத்திலும், அடுத்த ஆண்டு சட்டமன்றத்திலும் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்று கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், "நம்மை இணைப்பது தமிழ் மொழிதான். நான் நம்பிக்கையுடன் உயர்ந்திருப்பதற்குக் காரணமும் தமிழ் மக்கள்தான். தமிழ் மொழியை யாராலும் கீழே இறக்கிவிட முடியாது.

20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால், இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பதை தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். அடுத்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தங்களை அதற்கு தகுதி உள்ளவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்