சேலத்தில், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக போதை கும்பலை தேடி வந்தனர்.
அந்த வகையில், சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு அருகே தனிப்பட்ட சோதனை மேற்கொண்ட போது, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தற்போது, 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள், போதை ஊசி, வாகனங்கள் மற்றும் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இரண்டு பேர் தப்பி ஓடியதாகவும், அவர்களையும் பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சேலம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.