பிக்பாஸ் ஐஸ்வர்யாவிற்கு மோசடி பேர்வழியுடன் தொடர்பா? வெளியான அதிர்ச்சித் தகவல்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (13:04 IST)
பிக்பாஸ் ஐஸ்வர்யா கையில் பச்சைக்குத்தியிருந்த கோபி என்ற நபர் ஒரு மிகப்பெரிய மோசடிப் பேர்வழி என்று தெரியவந்துள்ளது.
பிக்பாஸ்2 வில் ஐஸ்வர்யாவை தெரியாதோர் யாரும் இருக்க முடியாது. அவர் செய்த சேட்டை கொஞ்சமா நஞ்சமா? தன்னை மினி ஓவியா என நினைத்துக்கோண்டு இவர் செய்த அட்டூழியங்கள் சொல்லி மாலாது.
 
அப்படி இருக்கும் வேளையில் இவர் கையில் பச்சை குத்திக்கொண்டிருந்த கோபி என்ற நபர் யார்? என பரவலாக கேள்வி எழுந்தது. 
 
இந்நிலையில் கோபி யார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. கோபி என்பவன் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருகிறேன் என கூறி மக்கள் பலரிடம் தலா ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கானோரை நாமம் போட்டவன் என்பதும், இவன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
இவன் நடத்தி வந்த மோசடி நிறுவனத்தில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னர் என பணத்தை இழந்த நபர் ஒருவர் கூறியிருக்கிறார்.
 
இந்த செய்தியானது நேற்றுமுதல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்