பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகா? ஐஸ்வர்யாவுக்கு 2வது இடம்?

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (14:08 IST)
பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.  நான்கு போட்டியாளர்களில் ரித்விகா வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
பிக்பாஸ் சீசன் இரண்டுக்காக 16 போட்டியாளர்கள்  களம் இறக்கப்பட்டனர்.
 
ஆனால் பிக்பாஸ்  சீசன் ஒன்று முழுவதையும் பார்த்து எப்படி விளையாட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தனர். அதனால்  பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் பாதி முழுவதும் போலி நடிப்புத்திறன்தான் வெளிப்பட்டது.
 
தற்போது ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா என நான்கு பேர் இருக்கிறார்கள்.
 
இவர்களில் விஜயலட்சுமி இடையில் வந்தவர் என்பதால் அவர் வெற்றிப்பெற வாய்ப்பில்லை. ஜனனி பிரபலமானவராக இருந்தாலும் , அமைதியாக , இருக்கும் இடம் தெரியாமல் செயல்பட்டதால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
 
ஐஸ்வர்யா தனது சிறுபிள்ளைத்தனமான, நேர்மையற்ற செயலால் மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்றும் முயற்சி தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
 
அதேசமயம் ரித்விகா தனது இயல்பான நடத்தையால் பொதுமக்களிடமும், சக போட்டியாளர்களிடமும் தான் யாரென்று நிருபித்துள்ளார். அதனால் இன்று நடக்கும் வெற்றிவிழாவில் ரித்விகா தேர்வு ஆவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்