இதை ஆண்களிடம் கேட்க வேண்டியதுதானே; பொங்கிய நடிகை கஸ்துரி

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (17:36 IST)
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சமந்தாவிடம் திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிப்பீர்களா என்று பெண்ணைப் பார்த்து  கேட்பவர்கள், ஏன் கேள்வியை தாலி கட்டிய அந்த ஆணிடம் கேட்க வேண்டியதுதானே என்று நடிகை கஸ்தூரி கேள்வி  எழுப்பியுள்ளார்.

 
நடிகை கஸ்தூரிக்கு தற்போது பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி நெட்டிஸன்களிடம் பாராட்களையும், திட்டுகளையும் வாங்கி கொள்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை  சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ஒரு பத்திரிகையாளர் சமந்தாவிடம் “திருமணத்துக்கு  பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.
 
இது குறித்து நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டரில் “திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று சமந்தாவிடம் கேட்பவர்கள், ஏன்  அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்கவில்லை” என்று கேட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் கஸ்தூரியை கேளிவி கேட்டு தாக்கிவிட்டார்கள். “உங்களுடன் நடித்த ரஜினியும், கமலும் இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  உங்களால் ஏன் முடியவில்லை? என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி, நானும் அதையேதான் கேட்கிறேன். தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்களை ஹீரோயினாக நடிப்பதை ஏன் ஏற்றுக்  கொள்வதில்லை? என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்