“ 4 சீன்தான் நடிச்சிருக்கேன்… இப்படி விளம்பரம் பண்ணாதீங்க” கடுப்பான யோகி பாபு!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:31 IST)
தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரப்படி முன்னணி நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபுதான்.

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் புகைப்படத்தோடு தாதா என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்த போஸ்டரைப் பார்க்கும்போது படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார் என்றே தோன்றியது. இந்நிலையில் இப்போது அதை மறுத்துள்ளார் யோகி பாபு. அதில் “இந்த படத்தில் நித்தின் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவு செய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள்” எனக் கூறியுள்ளார். யோகி பாபுவின் இந்த பதிவு திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்