யோகி பாபு நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கிள்’… A1 & பாரிஸ் ஜெயராஜ் இயக்குனரின் அடுத்த படம்!

வியாழன், 16 ஜூன் 2022 (15:23 IST)
சந்தானம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படமான “மெடிக்கல் மிராக்கல்” படத்தைத் தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக  அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு,  ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

நாயகனாக தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத்,  KPY வினோத்,  KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்