தாமதம் ஆகும் சிவகார்த்திகேயன் – மடோன் அஸ்வின் படம்… என்ன காரணம்?

திங்கள், 4 ஜூலை 2022 (16:06 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதையடுத்து டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளதாகவும், அதை முடிக்கும் பணியில் இயக்குனர் அஸ்வின் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்