ஷாருக் கான் படத்தில் முக்கிய வேடத்தில் தமிழ் நகைச்சுவை நடிகர்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (09:57 IST)
அட்லி இயக்கும் படத்தில் ஷாருக் கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ஏற்கனவே அவர் ஷாருக்கானோடு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்