லோகேஷ் பாணியில் அட்லி… ஷாருக் கான் படத்தின் டைட்டில் டீசர் ரெடி!

புதன், 1 செப்டம்பர் 2021 (10:04 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை வெளியிடும் விதமாக ஒரு டீசரை தயார் செய்துள்ளார்களாம்.  படத்துக்கு ஜவான் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். சமீபத்தில் விக்ரம் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் இதுபோல ஒரு டீசரை உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்