இதை உன் அம்மாவிடம் காட்டு ரொம்ப சந்தோஷப்படுவாங்க - யாஷிகாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (12:34 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். யோகி பாபுவுடன் சேர்ந்து அண்மையில் இவர் நடித்திருந்த ஜாம்பி வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. அதையடுத்து பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனாலே இவரை ஏகப்பட்டபேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிங்க் நிறத்தில் கவர்ச்சி உடை ஒன்றை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர் ஒருவர் இதை உன் அம்மாவிடம் காட்டு ரொம்ப சந்தோஷப்படுவாங்க என கூறி விளாசித்தள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்