’ரைட்டர்’ வெளியான மறுநாளே இயக்குனர் பிராங்க்ளினுக்கு அடுத்த பட வாய்ப்பு

வியாழன், 30 டிசம்பர் 2021 (07:33 IST)
’ரைட்டர்’ வெளியான மறுநாளே இயக்குனர் பிராங்க்ளினுக்கு அடுத்த பட வாய்ப்பு
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிராங்கிளின் இயக்கிய முதல் திரைப்படம் வெளியான அடுத்த நாளே அவருக்கு புதிய படம் ஒப்பந்தமாகி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை பிராங்கிளின் இயக்க உள்ளார்
 
இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிராங்கிளின் ஜேக்கப் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்