ரைட்டர் மிக அழுத்தமான படம்… வெற்றிமாறன் பாராட்டு!

புதன், 22 டிசம்பர் 2021 (15:08 IST)
இயக்குனர் வெற்றிமாறன் ரைட்டர் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்து  சமுத்திரக்கனி, ஹரி மற்றும் இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ள டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள ரைட்டர் படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையுலகினத்தினருக்கு திரையிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் ‘ரைட்டர் மிக அழுத்தமான திரைப்படம். நீண்டகாலமாக விவாதிக்க வேண்டிய பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதனை யாரோ ஒருவர் படமாக எடுத்துள்ளதே சந்தோஷமான விஷயம். காவல்துறையினரின் மன அழுத்தம் மற்றும் வலியை பேசுகிறது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்