OTT ல் மாஸ்டர் … தொடரும் பேச்சுவார்த்தை –விஜய் ரசிகர்கள் ஆர்வம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (08:53 IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை OTT ல் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ள படம் என்றால் அது மாஸ்டர்தான். கிட்டத்தட்ட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்னால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை வாங்கியவர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் மற்றும் பெண்குயின் போன்ற படங்களைப் போல, மாஸ்டர் படத்தையும் நேரடியாக் OTT ல் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் முதலில் இதற்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இப்போதைய நிலைமையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லாததால் தயாரிப்பு தரப்பு, பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அமேசான் தரப்பில் 175 கோடி வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் தரப்போ 225 கோடி ரூபாய் கேட்கிறதாம். இதனால் பேச்சுவார்த்தை இப்போது இழுத்துக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்