மீண்டும் ஓடிடி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதா டாக்டர் படக்குழு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (16:33 IST)
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் உரிமையைக் கைப்பற்ற ஓடிடி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையான மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பல முன்னணி நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் ரிலீஸாகவே விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தமிழில் பெரிய அளவில் கால்பதிக்கவேண்டும் என நினைக்கும் சோனி லைவ் நிறுவனம் இப்போது அந்த படத்தை தங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதைய நிலமையைக் கணக்கில் கொண்டு தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்