பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? பரணி கூறிய அதிர்ச்சி காரணம்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (22:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் பரணி, இன்று மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசனுடன் கலந்துரையாடினார்.



 
 
அதில் பரணி பல விஷயங்களை மனம் விட்டு பேசினார். அந்த வீட்டில் தன்னுடைய உடன் பிறந்த தங்கை போன்று நினைத்த ஜூலி கூட தனக்கு கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இருப்பினும் இன்னொருவருக்கு கட்டி கொடுத்த தங்கைக்கு இருக்கும் குணமே ஜூலிக்கும் இருந்ததாக தான் நினைத்து கொண்டதாகவும் கூறினார்
 
மேலும் மனைவி குழந்தையை பிரிந்து வெளிநாட்டில் வாழும் கணவர்கள் பட்ட வேதனையை தான் இந்த பிக்பாஸ் வீட்டில் அனுபவித்ததாக கூறினார்
 
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேற முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணம், தன்னால் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அனைவரும் கூறியதால்தான் உடனே அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்