கோலியா? ஜெய்ஸ்வாலா?... ரோஹித்தோடு ஓப்பனிங் இறங்கப் போவது யார்?

vinoth
புதன், 29 மே 2024 (11:37 IST)
ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்னும் விராட் கோலி அமெரிக்கா செல்லவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கோலியும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இதுவரை ரோஹித் ஷர்மா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இருப்பதால் அது சாத்தியமா என தெரியவில்லை.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கோலி 700 ரன்களுக்கு மேல் சேர்த்தார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக இறக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இளம் அதிரடி வீரரான ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்