தனி ஒருவன் 2 வில் யார் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும்… ரசிகர்களின் சாய்ஸ்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:23 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் பாகத்தின் இறுதியில் அரவிந்த் சாமி கதாபாத்திரம் இறந்துவிடுவதால் இரண்டாம் பாகத்தில் அவரால் தொடர முடியாது. இந்நிலையில் இப்போது வில்லன்களாக நடித்துக் கலக்கி வரும் பஹத் பாசில் அல்லது எஸ் ஜே சூர்யா இரண்டாவது பாகத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கல் விருப்பப்பட்டு சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்