விரைவில் அறிவிக்கிறேன்… விஜய் தேவரகொண்டா பகிர்ந்த ரொமாண்டிக் புகைப்படம்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:17 IST)
லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் இரண்டு கைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்க “நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. சீக்கிரம் அறிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகாவோடு காதலில் இருப்பதாக தகவல்கள் பரவ, அதை இருவருமே மறுத்து வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்