மருத்துவமனையில் கமல்ஹாசன்: இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது யார்?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:50 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்றால் குறைந்தது 15 முதல் ஒரு மாதம்வரை சிகிச்சை பெறவேண்டிய இருக்கும் என்பதால் வரும் வாரம் முதல் ஒரு சில வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
 
ஒரு சில ஊடகங்கள் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார் என்று கூறினாலும் இது குறித்து விஜய் டிவி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் இந்த நிகழ்ச்சியை ஒரு சில வாரங்களுக்கு நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்