பிக்பாஸ் தொகுப்பாளர் அதிரடி மாற்றம் - யார் தெரியுமா?

திங்கள், 22 நவம்பர் 2021 (20:34 IST)
நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளித்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்நிலையில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் குணமாகி வரும் வரும் ஸ்ருதி ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என நம்பமுடிகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்