காதலிக்கு வழங்கிய முதல் பரிசு என்ன? ரசிகரின் கேள்விக்கு சூப்பர் ஸ்டார் பதில்

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (18:13 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான். இப்படத்தில் இவருன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம்,  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ஷாருக்கான் அவ்வப்போது சமூக வலைதளம் மூலம்  உரையாடி அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காதலர் தினம் என்பதால், அவரது ரசிகர் ஒருவர், உங்கள் மனைவி கவுரி மேடத்திற்கு நீங்கள் வழங்கிய முதல் பரிசு என்ன என்று கேள்வி கேட்டார்.

இதற்கு ஷாருக்கான்,  அவரிடம் என் காதலைச் சொல்லி 34 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, அவருக்கு பிங்க் கலரில் ஒரு காதணி வழங்கியதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்