தர்மதுரையை பார்த்து வியந்த வெங்கடேஷ்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (18:18 IST)
தமிழில் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால் அதனை முதலில் தேடிப்பிடித்து பார்ப்பது தெலுங்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான்.


 


எதிர்பார்ப்புக்குரிய படம் என்றால் முதல்நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார்கள். ரீமேக் செய்தால் ஓடுமா என்று பல்ஸ் பார்க்கத்தான் இந்த பரபரப்பு.
 
சீனு ராமசாமியின் தர்மதுரை படம் நன்றாக உள்ளது என கேள்விப்பட்டு படத்தை பார்த்திருக்கிறார் நடிகர் வெங்கடேஷ். பல்ஸ் பார்க்கத்தான் இந்தப் படத்தை அவர் பார்த்தது. படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 
 
முக்கியமாக விஜய் சேதுபதியின் நடிப்பு. மனுஷன் வாழ்ந்திருக்கிறான் என்று அவர் பாராட்டியதாக கேள்வி.
 
சரி, தர்மதுரையில் வெங்கடேஷ் நடிப்பாரா? 
 
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்