சிம்புவை அடுத்து வெங்கல் ராவ் சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ் நடிகை..!

Mahendran

புதன், 26 ஜூன் 2024 (20:13 IST)
பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனக்கு சினிமா கலைஞர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் வெங்கல் ராவ் வேண்டுகோளை அடுத்து நடிகர் சிம்பு 2 லட்ச ரூபாய் அவருடைய சிகிச்சைக்கு நிதி உதவி செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சிம்புவை அடுத்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் எங்கள் ராவுக்கு நீதிபதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதுமட்டுமின்றி இன்னும் சில நடிகர் நடிகைகளும் நடிகர் சங்கமும் வெங்கல் ராவ் சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வடிவேலுவுடன் வெங்கல் ராவ் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் வடிவேலுவும் வெங்கல் ராவ் சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்