வோடஃபோன் ஐடியாவின் Verizon , Amazon நிறுவனங்கள் 4 பில்லியன் டாலர் முதலீடு !

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:10 IST)
இந்தியாவில் பிரபல தொலைபேசி நெட்வொர்க்கான வொடாபோனில் அமெரிக்க நிறுவனமான  Verizon மற்றும் Amazon ஆகியவை சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்` வெளியாகிறது.

138 கோடி  மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஜியோவின் வருகைக்குப் பின் ஜியோ நெட்வொர்க்கில் இணைந்தனர். அதனால் அதன்மீது கூகுள் பேஸ்புக் எனப் பல பிரபல நிறுவனங்கள் முதலீடுகளைக் குவித்தனர்.

ஆனாலும் ஏர்டெல் வோடபோனில் மக்கள் சந்தாதாரர்களாக வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில்,  அமெரிக்காவைச் சேர்ந்த வெரிசன் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும்  சுமார் 4 பில்லியன் அமெரிக்கா டாலர்களை  வோடபோன் ஐடியாவில்  முதலீடு செய்யவுள்ளது. இதன் மதிப்பு ரூ.29,354 கோடி ஆகும். இதன் மூலம் 14 சதவீத பங்குகளை அவை வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்