வெற்றிமாறனை தீவிரவாதி என்ற ஏர்போர்ட் அதிகாரி – இந்தி தெரியாததால் அவமானப்படுத்திய சம்பவம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:08 IST)
வெற்றிமாறனை 2011 ஆம் ஆண்டு ஒரு ஏர்போர்ட் அதிகாரி இந்தி தெரியாது என சொன்னதால் 45 நிமிடத்துக்கு மேல் காக்கவைத்த சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏர்போர்ட் அதிகாரி ஒருவரால் இந்தி தெரியாதா எனக் கேட்டு அவமானப் படுத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள வெற்றிமாறன் தனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லியுள்ளார்.

ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் ‘நான் ஆடுகளம் படத்தின் சர்வதேச திரையிடல் ஒன்றுக்கு சென்றுவந்த போது டெல்லி ஏர்போட்டில் அதிகாரி ஒருவர் என்னிடம் இந்தியில் பேசினார். எனக்கு இந்தி தெரியாது என சொன்னேன். உனக்க்கு இந்த நாட்டின் தாய் மொழி தெரியாதா எனக் கேட்டார். நான் என் தாய் பேசும் மொழி தமிழ் பேசுவேன். மற்றவர்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் பேசுவேன் என சொன்னேன். நீங்களும் காஷ்மீரிகளும்தான் இந்த நாட்டை உடைக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள் என சொல்லி என்னை 45 நிமிடத்துக்கும் மேல் காக்க வைத்தார். அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினார்.’ எனக் கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனருக்கே நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு ஏர்போட்டில் என்ன நிலை என யோசித்து பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்