வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படம் மூன்று ஆண்டுகளாக செய்திகளில் அடிபட்டு, பின்னர் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, அதன் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, சிம்பு நடிக்கும் இந்த படமும் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிம்பு இந்த படத்திற்காக அதிக சம்பளம் கேட்டதாகவும், வெற்றிமாறனும் அதிக சம்பளம் கோரியதால், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்தப் படத்தை கைவிட முடிவு செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால்தான், இது குறித்து வெளியாகி கொண்டிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்தப் படம் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.