டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

Prasanth K

திங்கள், 20 அக்டோபர் 2025 (12:09 IST)

தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் BTS வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்,

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ஜெயிலர். பெரும் ஹிட் அடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த தீபாவளிக்கு ரஜினி படம் எதுவும் வெளியாகாத குறையை போக்கும் விதமாக ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் காட்சிகளை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

 

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

 

Edit by Prasanth.K

Wishing everyone a super Deepavali ???????????? Here's a exclusive BTS from #Jailer2#HappyDeepavali pic.twitter.com/D1M4esKznG

— Sun Pictures (@sunpictures) October 20, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்