பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

Mahendran

புதன், 22 அக்டோபர் 2025 (18:00 IST)
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இரு புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த சீசனில் ஏற்கெனவே 20 பேர் இருந்ததால் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்காது என்று முதலில் கூறப்பட்டது.
 
ஆனால், தற்போது சின்னத்திரை நடிகர் ப்ரஜின் மற்றும் அவரது மனைவி சான்ட்ரா ஆகியோர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் போட்டியாளராக பங்கேற்கும் முதல் கணவன் - மனைவி ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர். 
 
இந்த புதிய வரவு பிக் பாஸ் வீட்டில் மேலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்