பவன் கல்யாணை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?... கோலிவுட்டில் பரவும் தகவல்!

vinoth

சனி, 18 அக்டோபர் 2025 (15:14 IST)
குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர் லோகேஷ் அதே வேகத்தில் இப்போது சறுக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தாக்குதல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்ரோல்களுக்கு உள்ளாகும் அளவுக்கு சென்றது விமர்சனம்.

இதன் காரணமாக ரஜினி- கமல் இணையும் படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக சொலப்படுகிறது. அதனால் அவர் கைதி 2 படத்தைதான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கைதி 2 பற்றியும் நம்பிக்கை அளிக்கும் விதமாக செய்திகள் வெளியாகவில்லை. அந்த படமும் தற்போது தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

இந்நிலையில் லோகேஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து பவன் கல்யாணை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனநாயகன் படத்தைத் தயாரித்து வரும் KVN புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் பவன் கல்யாணின் கால்ஷீட்களைப் பெற்றுள்ளது. ஏற்கனவே அந்நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்க லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் இப்போது லோகேஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்