நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’?

Webdunia
வியாழன், 18 மே 2023 (09:28 IST)
விஷ்ணு விஷால் நடித்த மோகன்தாஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து  ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் வீடியோ கடந்த ஆண்டு இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் எப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி படங்களுக்கு அடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னமும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக ஜியோ சினிமா ஓடிடியில் ரிலீஸ் செய்ய விஷ்ணு விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்