உதயநிதி ஸ்டாலின்தான் என் மகனுக்கு காட்ஃபாதர்… மேடையில் கண்கலங்கிய நடிகரின் தந்தை!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:00 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் திரைப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஷ்ணு விஷாலின் தந்தை ‘சினிமாவில் என் மகனுக்கு காட்பாதர் உதயநிதி ஸ்டாலின்தான். என் மகனின் வெற்றிக்கு ரெட்ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் அதிகமாக பங்களித்திருக்கிறது’ எனக் கூறி மேடையிலேயே கண்கலங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்