விஷ்ணு விஷால் படத்தைப் பார்த்து பாராட்டிய தனுஷ்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:58 IST)
விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் இப்போது கேரள மற்றும் கர்நாடக உரிமை மற்றும் ஓடிடி உரிமை (அமேசான் ப்ரைம்) ஆகியவற்றை ரிலிஸூக்கு முன்பே விற்று கையில் லாபத்தோடு படத்தை ரிலீஸ் செய்கிறார். இவரின் முந்தைய படமான ராட்சசன் வெற்றியே எஃப் ஐ ஆர் விநியோகத்துக்கு பெருமளவில் உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸூக்கு முன்பே பார்த்துள்ள நடிகர் தனுஷ் ’படம் சிறப்பாக வந்துள்ளதாகவும், படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளதாகவும்’ பாராட்டியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்