சூரிய ஏமாத்தாதீங்க தல… உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன் – ரசிகரின் கமெண்ட்டுக்கு விஷ்ணு விஷால் பதில்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:34 IST)
தமிழ் சினிமாவில் வரவேற்பைப் பெற்ற கதாநாயகன் நகைச்சுவை நடிகர் காம்போவில் விஷ்ணு விஷாலும், சூரியும் இருந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு எழும் விதமாக சூரி காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார்.

அதில் நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பாளர் அன்பு வேலவன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த விஷ்ணு விஷால் தன் தந்தை குற்றமற்றவர் என சமூகவலைதளங்களில் கூறி வந்தார். இந்த வழக்கின் விசாரணை இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டரில் சில புகைப்படங்களைப் பகிர, அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ‘சூரிய ஏமாற்றாதீங்க தல, உங்களை முன்னர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்’ எனக் கமெண்ட் செய்தார். அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் ‘உண்மை இன்னும் வெளியே வரவில்லை. யாரு யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும். யார் நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்பது சீக்கிரமாகவே வெளியே வரும்.  அப்போ என்னை விரும்புவதா அல்லது வெறுப்பதா என முடிவு செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்